இறையுதிர் காடு - 16 | Iraiyuthir kaadu: Indra Soundar Rajan series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

இறையுதிர் காடு - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று முப்பு பற்றிய விளக்கத்துடன் இதுவே காயகற்பம் உண்பதற்கு முன்பாக உண்ண வேண்டிய முதல் மருந்து என்றும் போகர் பிரான் கூறவும், அதை எழுத்தாணி கொண்டு எழுதியபடி இருந்த கார்மேகக் கோனார் எழுத்தாணியைக் கீழே வைத்துவிட்டு, கைவிரல்களை நீவி விட்டுச் சோம்பல் முறிக்கத் தொடங்கினார். அதைக் கண்ட போகரும்,

“என்ன கிழாரே... முப்பு குறித்துத் தாங்கள் முன்பே ஏதும் கேள்விப்பட்டிருக்கிறீரோ?” என்று கேட்டார். கார்மேகக்கிழார் முகத்தில் வியப்பு.

“போகர் பிரானுக்கு அஷ்டமா சித்தி கடந்து மனோவாசிப்பும் உண்டு போலும். நான் அதன் பொருட்டே எழுத்தாணியைக் கீழே வைத்தேன் என்பதைத் தாங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள் பிரானே?” - என்று கேள்வி எழுப்பினார்.