சோறு முக்கியம் பாஸ்! - 54 | Tholudur Akka hotel - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

சோறு முக்கியம் பாஸ்! - 54

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வெ.நீலகண்டன்

சாப்பிட்டு முடித்து, வயிறும் மனமும் குளிர்ந்த மனிதர்கள் உதிர்த்துவிட்டுப் போகும் வாய்வார்த்தைகளாலேயே பிரபலமான உணவகங்கள் நிறைய உண்டு. அப்படி, லாரி ஓட்டுநர்களின் வாய் வார்த்தைகளால் பிரபலமான ஓர் உணவகம்தான், அக்கா கடை. 

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்,  252-வது கிலோ  மீட்டரில் இருக்கிறது தொழுதூர்.  வளைந்து நீண்டு ஊடாடிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஊருக்கு மேலே ஒரு மேம்பாலத்தில் ஏறி இறங்கும். மேம்பாலம் ஏறுமிடத்தில் இருபுறங்களிலும் வரிசையாக லாரிகள் அணிவகுத்து நிற்கும். அதுதான் அடையாளம், அக்கா கடைக்கு. வசந்தி அக்கா, உணவகத்துக்கு வைத்த பெயர், ரெட்டியார் மெஸ். ஆனால், அக்காவின் அன்பாலும் உபசரிப்பாலும் நெகிழ்ந்துபோய் ‘அக்கா கடை’ என்று மாற்றி விட்டார்கள் மக்கள். 

1999-ல் தொடங்கப்பட்ட உணவகம். முதலில் வீட்டுக்கு மேல்  தார்ஷீட் போட்டு, சிறிய அளவில் தொடங்கியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க