கேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora | Game Changers: Quora - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

கேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

கேள்வி: ``ஏன் நம் தலைமுறையில் மட்டும் நிறைய தொழில் முனைவர்கள் இருக்கிறார்கள்?”

பதில்:  “உலகம் நிறைய மாறியிருக்கிறது. தொழில் தொடங்குவது எளிமையாகியிருக்கிறது. பேஸ்புக் தொடங்கியபோது நான் அதிலிருந்தேன். அப்போது ஒரு டேட்டா சென்டர் தேவையென்றால் முழு நேரமும் அதை மட்டுமே பார்க்கும் ஒருவர் தேவை. இன்னொரு ஊரில் டேட்டா சென்டர் தேவையென்றால் அங்கே போய், கருவிகளை வாங்கி, பொருத்தி, அவை சரியாக வேலை செய்கின்றனவா எனப் பார்க்க ஓரிரு வாரங்கள் ஆகும். அப்படித்தான் பேஸ்புக் தொடங்கியது. இப்போது அமேசான் சேவைகளை டேட்டா சென்டருக்காகப் பயன்படுத்துகிறார்கள். 20 புதிய சர்வர்களை இணைக்க சில நிமிடங்கள் போதும். அலுவலகத்திலிருந்தே ஒரு இன்ஜினீயர் இதைச் செய்து முடித்தால் புதிய டேட்டா சென்டர் தயார். இதேபோல தொழில் தொடங்கத் தேவையான புராசஸ்களும் எளிமையாகியிருக்கின்றன. அதனால்தான் புதிய ஸ்டார்ட் அப்-கள் நிறைய தொடங்கப்படுகின்றன.”

இந்தக் கேள்வியும் பதிலும் கோரா (Quora) எனப்படும் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. கேள்வி கேட்டவர் யாரோ ஒருவர். பதில் சொன்னது ஆடம் டி ஏஞ்செலோ (Adam D’Angelo).

ஆடம் டி ஏஞ்செலோ மற்றும் சார்லி சீவர் இருவரும் பேஸ்புக் நண்பர்கள். அதாவது, பேஸ்புக்கில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். ஒரு மதிய உணவுக்காக இருவரும் சீன உணவகம் ஒன்றைத் தேடிச் சென்றிருந்தார்கள். கண்டுபிடிக்கவே சிரமமாக இருந்த உணவகம் அது. அதேபோல, இணையத்தில் கண்டுபிடிக்க சிரமமான விஷயமென ஏதுமிருக்கிறதா எனப் பேச்சு தொடங்கியது. அதைத் தொடர்ந்து வந்த பல உணவு இடைவேளைகள் இதைப் பற்றியே பேச்சு வளர்ந்தது.

இணையத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள். அதேநேரம் இணையத்தின் சாபக்கேடாக, தவறான செய்திகளும் இருக்குமென அவருக்குத் தெரியும். அதனால், நம்பகமான ஓரிடம் இருந்தால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது அவர் எண்ணம். அப்போதுதான் கேள்வி - பதில் வடிவம் அவர்கள் பேச்சுக்கு உள்ளே வந்தது.  பதில் கேட்பதும் தருவதும் வாசகர்கள் வேலை எனவும், அதை உறுதிப்படுத்தும் ஒரு சிஸ்டத்தை ஏற்படுத்துவது தன் வேலை எனவும் திட்டமிட்டார் ஆடம். அப்போது Yahoo answers என ஒரு சேவை இருந்தது. ஆனால், நல்ல பதில்களைவிட ஜாலியாக, கிண்டலான பதில்களே அதில் அதிக கவனம் பெற்றன. ஆனாலும் கூட்டம் அள்ளியது. அந்த வடிவத்தை நிறைய பட்டி டிங்கரிங் பார்த்தால் என்னவெனத் தோன்றியது ஆடமுக்கு. ஆடமின் அந்த ஜீபூம்பாவை சார்லியும் நம்பினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க