“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!” | Actor Vaibhav interview about Sixer movie - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

“இவ்ளோ ஸ்லோ வேலைக்காவாது!”

“ ‘சின்னதம்பி’ படத்துல கவுண்டமணி சார் கேரக்டர் மாதிரி, இந்தப் படத்துல ஹீரோ கேரக்டருக்கு ஆறு மணிக்குமேல கண் தெரியாது. அப்படிப் பார்வைச் சவால் உள்ள ஒருத்தனுக்குக் காதல் வந்தா என்ன நடக்கும்னு ஜாலியா சொல்றதுதான் ‘சிக்ஸர்!” - வெறும் கைகளால் பேட்டைச் சுழற்றுவது போன்ற பாவனையுடன் பேசுகிறார் வைபவ்.

“ஸ்போர்ட்ஸ் பட டைட்டிலா இருக்கே?!”

“இல்லை, இது ஒரு ரொமான்டிக் காமெடிப் படம்னு சொல்லலாம். டபுள் மீனிங் காமெடி, விரசமான காட்சிகள் எதுவும் இல்லாத க்ளீன் காமெடிப் படமா ‘சிக்ஸர்’ இருக்கும். ஹீரோயினா பாலக் லால்வாணி நடிச்சிருக்காங்க. காமெடிக்கு சதீஷ் இருக்கார். முதல் முறையா ஜிப்ரான் மியூசிக்ல நான் நடிச்சிருக்கேன். இயக்குநர் சாச்சி புதுமுகம்.”