“வீட்டில் சினிமா பத்திப் பேசமாட்டோம்!” | Actress Amala interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

“வீட்டில் சினிமா பத்திப் பேசமாட்டோம்!”

சனா

“நான் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது வருசம் ஆகிடுச்சு. திருவான்மியூர்  கலாஷேத்ராவுல பரதநாட்டிய க்ளாஸுக்குப் போயிட்டிருந்த சமயம், அங்கே என்னைப் பார்த்த டி.ஆர்.சாரும்,  உஷா மேடமும் என் வீட்டைக் கண்டுபிடிச்சுத் தேடி வந்து, ‘மைதிலி என்னைக் காதலி’ படத்துல நடிக்கக் கேட்டாங்க. ‘பரதநாட்டியம் தெரிஞ்ச பொண்ணுதான் ஹீரோயினா வேணும். ரெண்டு மாசம் கால்ஷீட்’னு சொன்னாங்க. விடுமுறை நாள்ல ஷூட்டிங் இருந்தது. அதனால ஓகே சொன்னேன், நடிச்சேன், படம் ரிலீஸாகி பெரிய ஹிட் ஆச்சு. இப்போ திரும்பிப் பார்த்தா, பல படத்துல நடிச்சுட்டேன். திருமணம் முடிஞ்சது. வாழ்க்கை சந்தோஷமா போகுது. சமீபத்துல டி.ஆர்.சார், குறளரசன் திருமணப் பத்திரிகையை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தார், பழைய நினைவுகளையெல்லாம் சந்தோஷமா பேசிப் பகிர்ந்துக்கிட்டோம்.” - அத்தனை சந்தோஷமாகப் பேசும் அமலாவின் வார்த்தைகளில் அழகான தமிழ். தற்போது, நடிகர் கிருஷ்ணா தயாரித்திருக்கும் ‘ஹை ப்ரிஸ்டெஸ் (High Priestess)’ என்ற வெப் சீரிஸில் ஹீரோயினாக நடித்திருக்கும் அமலாவிடம் பேசினேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க