சென்னை இழந்த முத்தையா! | Madras Day S.Muthiah passes away at 89 - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

சென்னை இழந்த முத்தையா!

சென்னை என்ற இப்பெருநகரத்தின் வயது 400 எனச் சொல்லப் படுகிறது. 400 வருட  வரலாற்றை, கலாசாரத்தை, இங்கு வாழ்ந்த பல மக்களின் வாழ்வை, இதன் பாரம்பர்யச் சின்னங்களை ‘மெட்ராஸ்’ என்ற ஒரு சொல் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. மெட்ராஸின் வரலாற்றை, வசீகரத்’தை இந்தத் தலைமுறை இளைஞர்களுக்குக் கொண்டு சென்றவர்கள் பலர். அவர்களில் முக்கியமானவர் எஸ்.முத்தையா. கடந்த 20ஆம் தேதி அவர் இறந்தபோது அவருக்கு வயது 89. ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்படும் ‘மெட்ராஸ் டே’ உருவாகக் காரணமாக இருந்தவர் முத்தையாதான்.