“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!” | ornithologist P.Jeganathan interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

“2.0 - அறிவியலுக்கு எதிரான படம்!”

‘மக்களை முதலில் பறவைகளைப் பார்க்கப் பழக்க வேண்டும்; பிறகு காக்கப் பழக்க வேண்டும்” - பறவை ஆய்வாளர் ப.ஜெகநாதன் வலியுறுத்தும் அடிப்படை இது. இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம் (Nature Conservation Foundation) சார்பாகக் காட்டுயிர் இயலாளராக வால்பாறையில் ஆய்வுகளைச் செய்துவரும் அவருடனான நேர்காணல் இனி...

``முன்பு குளம், ஏரி, காடு மேடுகள் எல்லாம் சுற்றும்போது அங்கிருக்கும் மரங்கள், உயிரினங்களின் பெயர்களைத் தெரிந்து வைத்திருந்தோம். தொலைக்காட்சி, கைப்பேசிகள் இப்போது நம்மை ஓரிடத்தில் முடக்கி வைக்கின்றன. அதிலிருந்து அவர்களைத் திசை திருப்ப, இயற்கைமீது பற்றுதல் ஏற்பட, அதைப் பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனை உதிக்க, பறவை நோக்குதல் பயன்படும். பறவை என்றில்லை, வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பூச்சிகள் என எந்த உயிரினமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், நமக்குப் பிடித்தால்தானே பாதுகாக்க நினைப்போம். ஆதலால், இயற்கையை ரசிக்க வைக்க வேண்டும். அதன்மூலம் பறவைகளை மட்டுமல்லாமல் அவற்றின் வாழிடங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் மக்களிடம் தோன்றும். ஒரு சதுப்புநிலம் ஆக்கிரமிக்கப்படுகிறதென்றால் அதை எதிர்த்து மக்களைப் போராட வைக்கும்.

அதையும் தாண்டி, இதில் ஈடுபடும் ஒருவர் பொறியாளராக மாறினால் அணைகட்டுவதாக இருந்தாலும், காட்டின் குறுக்கே சாலைபோட நேர்ந்தாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் முறையாகச் செய்யவேண்டுமென்று நினைப்பார். ஒரு பொறுப்புள்ள சூழலியல்வாதியாக மக்களை உருவாக்குதில் பறவை நோக்குதல் மிகப்பெரிய பங்காற்றும். இதை மக்கள் அறிவியல் என்று சொல்லலாம்.”