புதிய அரசு என்ன செய்யவேண்டும்? | What should the new government do in Administration? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

புதிய அரசு என்ன செய்யவேண்டும்?

கோ.பாலச்சந்திரன்

மிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துவிட்டாலும், இந்தியாவில் பல மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்து அமையப்போவது காங்கிரஸ் அரசா, பா.ஜ.க. அரசா, கூட்டணி அரசா என்பதற்கான விடை, மே 23-ல் தெரிந்துவிடும். எந்த அரசாக இருந்தாலும், புதிய அரசு கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் எவை என்பது குறித்து அலசும் மினி தொடர் இது. இந்த வாரம் ஆட்சி நிர்வாகம் குறித்து அலசுகிறார், மேற்கு வங்க அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, இஸ்ரோவின் பொருளாதார ஆலோசகர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருந்த  ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோ.பாலச்சந்திரன்.

புதிதாக அமையவுள்ள மத்திய அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பைவிட மாநில அரசுகளின் எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கின்றன. அவை மக்கள் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியவைதாம். அவற்றில் முக்கியமானது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, நிர்வாக அமைப்பு மற்றும் நிதிநிலை நிர்வாகத்தில் மாநிலங்களுக்கான உரிமைகள் மதிக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்பது. இது  மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமிடையிலான வேறுபாடுகளைக் களையும். இணக்கத்தை உருவாக்கும். அதேநேரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து போவது மட்டுமே இந்தியா என்ற நாட்டினை வலிமையுள்ளதாக மாற்றிவிடாது. இவற்றையும் தாண்டி, குறிப்பாக மத்திய அரசுத்துறைகளான  பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.