நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா? | Discuss about Military suicides issue - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

நாட்டைக் காப்பவர்களை நாம் காக்க வேண்டாமா?

ஓவியம்: பாலகிருஷ்ணன்

தேனும் தாக்குதல் நடைபெறும்போது மட்டும் நாம் தேசபக்தி குறித்தும் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை குறித்தும் பேசுகிறோம். ஆனால், பகைநாடுகளின் நெருக்கடிகளை மட்டுமல்ல, உள்ளுக்குள்ளேயே பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கும் இக்கட்டான நிலையில் நம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா?

  தேஜ் பகதூர் யாதவ் என்ற எல்லைக் காவல் படை வீரரை நினைவிருக்கிறதா? 2017-ம் ஆண்டு ‘எங்களுக்குத் தரும் சாப்பாடு தரமற்று இருக்கிறது’ என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். பிறகு அந்தத் தகவல் தவறு என்று அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாமும் மறந்துபோனோம். ஆனால் பிரச்னை அவ்வளவு எளிதானதில்லை.

அதிகரித்துவரும் ராணுவ வீரர்களின் தற்கொலை விவரம் குறித்து சமீபத்தில் ராஜ்ஜியசபையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே ராணுவ வீரர்களின் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்களை அடுக்கியுள்ளார்.