இலங்கை: தொடர வேண்டாம் துயரம்! | Suicide bombings in Sri Lanka - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

“தீவிரவாதிகள் ஈக்களைப் போன்றவர்கள். அவர்கள் வலிமையற்ற வர்கள். அவர்களால் ஒரு தேநீர்க் கோப்பையைக்கூட சேதப்படுத்த முடியாது. ஆனால், அவர்களால் ஒரு பெரிய எருதின் காதுக்குள் நுழைந்துவிட முடியும். அதைத் தன் விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிக்க முடியும். அதற்குக் கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி சேதம் விளைவிக்க முடியும்.”
- யுவல் நோவா ஹராரி, ஹோமோ டியஸ்

ழக்கம்போல புனித செபஸ்டியன் தேவாலயத்துக்குச் செல்ல ஆயத்தமாகிறார் அந்த முதியவர். ஈஸ்டர் பண்டிகையையொட்டிப் பெருங்கூட்டம் அங்கு மொய்த்திருக்க, பக்கத்திலிருக்கும் வேறொரு தேவாலயத்துக்குச் செல்கிறார். இவரது ஒட்டுமொத்தக் குடும்பமும், செபஸ்டியன் தேவாலயத்தின் வெளியே அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த பிரார்த்தனைக் கூட்டத்திற்காகக் காத்திருக்கிறது இந்தக் குடும்பம். இவரது பேத்தியின் தலையை வருடியபடி தேவாலயத்துக்குள் நுழைகிறார் ஒருவர். அந்த நபர் தேவாலயத்துக்குள் சென்றதும் வெடித்துச் சிதறுகிறார். என்ன நடந்தது என யோசிக்கும் முன்பு,  இதே போன்று வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களால், நிலைகுலைந்துபோயிருக்கிறது இலங்கை.