வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

வலைபாயுதே

twitter.com/MrElani
ஜெயசூர்யா, பான்ட்டிங் பேட்ல ஸ்பிரிங் இருக்குன்னு நம்புன குரூப், ஐபிஎல் எல்லாம் மேட்ச் ஃபிக்ஸிங்னு சொல்லி இன்னும் நடுரோட்டுல திரிஞ்சிட்டிருக்கு!

twitter.com/ItsJokker

இன்னைக்குத் தொப்பை குறையலை யேன்னு வருத்தப்படுறவன்லாம் யாரு? ஒரு காலத்துல இந்த உடம்பு ஒல்லியா இருக்கேன்னு நினைச்சு வருத்தப் பட்டவங்கதான்!

twitter.com/arattaigirl
கையாளத்தெரியாத எதுவுமே சுமைதான் #அன்பு, காதல், புகழ், கோபம், நட்பு, பொறாமை, இணையம்!

twitter.com/ImSarva36

இந்த லாரன்ஸ்கிட்ட இருந்து யாராவது பேயைக் காப்பாத்துனா நல்லா இருக்கும்!

twitter.com/tamilravi
அம்மை வருவது அம்மன் செயல் என்று ஒரு காலம் இருந்தது. இன்றைய குழந்தைகள் அதைக் கேட்டால் சிரிப்பார்கள். அறிவியல் வளர வளர மூட நம்பிக்கைகள் தானாக மறையும். கடவுள் யார் என்பதை அறிவியல் பார்த்துக் கொள்ளும். பூசாரி யார் என்பதைத்தான் நம் அரசியல் பேச வேண்டும் :)