தொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே! | Famous economic criminals in India - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/05/2019)

தொழிலதிபர்கள்: தொடர்பு எல்லைக்கு வெளியே!

பெருநகரப் பேருந்தின் பயணியிடம் வெறும் பத்து ரூபாய் இருக்கும் ஒரு பர்சை பிக்பாக்கெட் அடிக்கும் ஒருவன் சிக்கினால் அவ்வளவுதான்... பிரித்து மேய்ந்துவிடுவார்கள். விவசாயம் செய்கிறேன் என்று ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி, மழை பொய்த்து, கிணறு வற்றி, நோய் தாக்கி, விளைச்சலின்றிப்போய், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் உங்களின் ஓட்டுவீட்டு வாசலில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டுவார்கள். லேத் பட்டறை நடத்துகிறேன் என்று வங்கியில் கடன் வாங்கி, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு எனப் பலமுனைத் தாக்குதலில் பாதித்து, பட்டறையை மூடிவிட்டு, வட்டி கட்டாமலிருந்தால் பேப்பரில் உங்கள் படம் போட்டு விளம்பரம் கொடுப்பார்கள். ஆனால், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, ஒரு ரூபாயும் கட்டாமல் நீங்கள் உலகம் சுற்றக்கிளம்பிவிடலாம். ஒரு கண்டிஷன்... உங்களுக்கு யாராவது ஒரு செளக்கிதாரைத் தெரிந்திருக்க வேண்டும்.