K-13 - சினிமா விமர்சனம் | K-13 - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2019)

K-13 - சினிமா விமர்சனம்

ரு நாள்... ஒரு ஆள்... ஒரு ப்ளாட்... ஒரு மரணம் - இவற்றையெல்லாம் முடிச்சுப்போட்டு நம்மை சீட் நுனிக்கு அழைத்துவந்தால் அதுதான் K-13.

துணை இயக்குநரான அருள்நிதிக்கு படம் இயக்கும் வாய்ப்பு காலிங்பெல் அடிக்கிறது. அந்தக் குஷியில் நண்பர்களோடு பார்ட்டிக்குச் செல்கிறார். அங்கே ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை சந்திக்கிறார். கட்...! மறுநாள் ஒரு வீட்டில் மயங்கிய நிலையில் நாற்காலியோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறார் அருள்நிதி. அவருக்குப் பின்னால் ரத்தம் சொட்டச் சொட்ட பிணமாகக் கிடக்கிறார் ஷ்ரத்தா. என்ன நடந்தது என அருள்நிதியோடு சேர்ந்து நாமும் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதுதான் இந்த திக்... திக்... த்ரில்லர்!