ஆடுபுலி ஆட்டம்! - என்ன செய்யப்போகிறார்கள் எடப்பாடியும் ஸ்டாலினும்? | By-Election strategy of Stalin and Edappadi Palaniswamy - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2019)

ஆடுபுலி ஆட்டம்! - என்ன செய்யப்போகிறார்கள் எடப்பாடியும் ஸ்டாலினும்?

‘‘39 பெரிதா, 22 பெரிதா?’’ என்று எல்.கே.ஜி குழந்தையிடம் கேட்டால்கூட, பளிச்சென்று பதில் சொல்லிவிடும். ஆனால், எடப்பாடி பழனிசாமியிடமும், மு.க.ஸ்டாலினிடமும் இதே கேள்வியைக் கேட்டால் ‘‘22தான்!’’ என்று சொல்வார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ள 39 தொகுதிகளைவிட இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இவர்களிருவருக்குமான ஒற்றை அஜெண்டா.

ஒருவருக்கு, ஆட்சியை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இன்னொரு வருக்கு, எப்பாடுபட்டாவது இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். வரும் ஜூன் 3 கருணாநிதியின் பிறந்தநாள் அன்று பதவியேற்பு விழாவையே நடத்திவிடலாம் என்று முதல்வர் கனவில் மிதக் கிறார் மு.க.ஸ்டாலின். தேர்தல் முடிவுகள் வரும்முன்பு, சட்டமன்ற பலத்தையே குறைப்பதற்கான வேலையைத் தொடங்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி.