100 - சினிமா விமர்சனம் | 100 - Ciname Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

100 - சினிமா விமர்சனம்

பெண்களுக்கு எதிராய் நடக்கும் அநீதி; அதை அண்ணனாய்த் தட்டிக்கேட்கும் ஒரு காவல்துறை அதிகாரி!

எஸ்.ஐ போஸ்டிங் கிடைத்ததும், ஒட்டுமொத்த நகரத்தையும் கன்ட்ரோலில் வைத்திருக்கக் கனவு காண்கிறார் சத்யா. ஆனால், போஸ்டிங்கோ கன்ட்ரோல் ரூமில்... ஓடியாடிக் கடமையாற்ற நினைத்தவருக்கு, ஓர் அறைக்குள் அழைப்புகளை எடுக்கும் வேலை. கலங்கிப்போகிறார். அவர் எடுக்கும் நூறாவது அழைப்பு அவருடைய சுமார் வாழ்வை சூப்பர் ஹீரோ வாழ்வாக மாற்றுகிறது.

எஸ்.ஐ சத்யாவாக அதர்வா. மாஸ் ஹீரோ எனும் பிம்பத்துக்கு முறுக்குக் கம்பியாக, தன்னைத் தகவமைத்து க்கொண்டு நன்றாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் புயல்!

சத்யாவின் காதலி நிஷாவாக ஹன்சிகா மோத்வானி அவ்வப்போது வருகிறார்.  யோகிபாபுவின் கவுன்டர்களுக்கு அரங்கம் குலுங்குகிறது. ராதாரவி மற்றும் சீனுமோகனின் நடிப்பில் அவ்வளவு அனுபவம் தெறிக்கிறது! மகேஷ், ராஜ் ஐயப்பா, மைம் கோபி, சரவணன், நிரோஷா, விஜய், ஹரிஜா என எல்லோருமே சிறப்பு.

ஆரம்பத்தில் ஒட்டாமல் `மசமச’வென நகரும் கதை, சில நிமிடங்களிலேயே வேகமெடுக்கிறது. அதர்வாவுக்கு போஸ்டிங் கிடைத்தபின், அசுர வேகம்தான். இறுதிக்காட்சியில்தான் இளைப்பாறுகிறது. ஆங்காங்கே, நாயகன் செய்யும் சில சாமர்த்தியமான வேலைகள் செம்மை.