கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’! | Director Santhakumar interview about Mahamuni movie - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!

ரே ஒரு படம்தான், தமிழ் சினிமா ரசிகர்களால் தேடப்படும் இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தவர் `மௌனகுரு’ சாந்தகுமார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆர்யா நடிப்பில் ‘மகாமுனி’யோடு  வரவிருக்கிறார். ஏழு வருட இடைவெளியில் கொஞ்சம் பருமனான உடல், வெட்டிய முடி என ஆளே மாறியிருக்கிறார், இந்தத் தனிமைக் காதலர்!


“தனிமை நீங்க விரும்பித் தேர்ந்தெடுத்துக்கிட்டதா, வாழ்வின் போக்கில் வந்ததா?”

“நான் இருந்தது மதுரைக்குப் பக்கத்துல ஒரு சின்ன டவுன். கெட்டுப்போயிடுவேன்னு எங்க அம்மா என்னைத் தெருவுல விளையாட விடமாட்டாங்க. எங்க வீடு ரொம்பப் பெருசு. கொல்லைப்புறத்துல தட்டான்பூச்சி புடிக்கிறதும், பட்டாம்பூச்சி புடிக்கிறதுமாவே பொழுது போயிடுச்சு. அது ஒன்பதாம் வகுப்புல பாம்பு பிடிக்கிறவரை கொண்டுபோயிடுச்சு. சுருக்கமா சொன்னா, இயல்பான குழந்தைத்தனத்தை நான் இழந்தேன்னுதான் சொல்லணும். வீட்டுல கட்டிப்போட்டிருக்கிற நாய், ரோட்டுல போற நாயைப் பார்த்துத் தவ்வுமே... அப்படித்தான் இருந்தது என்னோட சின்ன வயசு. எனக்கு அப்போ தனிமை பிடிக்காது; இப்போ எனக்கு அதுதான் தேவையாகிடுச்சு.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க