அயோக்யா - சினிமா விமர்சனம் | Ayogya - Cinema Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

அயோக்யா - சினிமா விமர்சனம்

யோக்கியர்களை அழிக்க வேண்டிய போலீஸே அயோக்கியனாக இருந்தால்... ஒருநாள் அந்த அயோக்கிய போலீஸ் திருந்தினால்....

கலெக்‌ஷன், கரப்ஷன் என வாழும் இன்ஸ்பெக்டர் விஷால். பார்த்திபனின் ‘அண்டர் கிரவுண்டு’ வேலைகளுக்கு ‘அண்டர்ஸ்டாண்டி ங்’காக இருந்து ‘வசதியாய்’ வாழ்கிறார். நிறைய பணமும் கொஞ்சம் சரக்குமாய் `மாமூலாய்’ போய்க்கொண்டிருக்கும் விஷாலின் வாழ்க்கையில் பூஜா தேவரயா மூலம் திருப்பம் ஏற்படுகிறது. பார்த்திபனோடு முட்டல் மோதல் ஆரம்பமாகிறது. விஷாலுக்கும் பூஜாதேவரயாவுக்கும் என்ன சம்பந்தம், அவரைக் காப்பாற்றினாரா, நல்ல போலீஸாக விஷால் மாறினாரா இல்லையா... என்பதுதான் அயோக்யாவின் க்ளைமாக்ஸ்.