கீ - சினிமா விமர்சனம் | Kee - Cinema Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

கீ - சினிமா விமர்சனம்

ஹேக்கருக்கும் ஹேக்கருக்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பார்க்கிறது. அதுதான் `கீ.’

தேர்வில் காப்பியடிப்பது, பெண்களை ஏமாற்றுவ தென சில்லறைச் செயல்களுக்காக ஹேக்கிங்கைப் பயன்படுத்தும் ஹேக்கர், சித்து; கொலை செய்யவும், கொள்ளையடிக்கவும் ஹேக்கிங்கைப் பயன்படுத்தும் ஹேக்கர், சிவா. இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக்கொள்ள, ஆரம்பமாகிறது அறிவுப்போர்!  ட்யூப் லைட், ஃபேன், அம்மிக்கல், ஆட்டுக்கல்லைத் தவிர எல்லாவற்றையும் ஹேக் செய்து சண்டை  போடுகிறார்கள். இறுதியில் வென்றது யார் என, பார்வையாளர்களை தர்ம அடி அடித்துக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் காளீஸ்.