“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!” | Pandiarajan interiew with Bhagyaraj - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”

“உங்கள் குருநாதர் இயக்குநர் பாக்யராஜ் திரையுலகில் காலடிவைத்து 40 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி குருவை நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும்” என சிஷ்யர் பாண்டியராஜனைக் கேட்டுக்கொண்டோம். உடனே உற்சாகமாக ஒப்புக்கொண்டார். பாக்யராஜ் அலுவலகத்தில் நுழைந்ததும் “வாய்யா பாண்டியா” என்று சிஷ்யனை குரு வாஞ்சையோடு அழைக்க... பேட்டி  தொடங்குகிறது.

பாண்டியராஜன் : “சார், உங்க டைரக்டர் பாரதிராஜா சார்கிட்ட உங்களுக்குப் பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன?”

பாக்யராஜ் :  “ எங்க டைரக்டர்கிட்டே  எனக்குப் பிடிச்சது தேனீப்போல சுறுசுறுப்பான அவர் உழைப்பும், எந்தச் சூழ்நிலையிலேயும் தளராத   தன்னம்பிக்கையும். ‘என் படம் இதுதான், இப்படித்தான் வரும்’  என்று முழுத்தெளிவோட இருப்பார். ‘16 வயதினிலே’ படத்தோட எடிட்டிங். ஒரு சீன் சொல்லி ‘ஷூட்டிங்குல அந்த சீன் எடுத்திருந்தோமே, அது எங்க?’ன்னு  டைரக்டர்  கேட்க, ‘நீங்க அப்படி ஒரு காட்சிய ஷூட் பண்ணவே  இல்லை’ன்னு நானும், பாலகுருவும் சொன்னோம். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.  நான் கிளம்பிட்டேன்.  டைரக்டரும், பாலகுருவும் தேடுறத நிறுத்தல. எப்படியோ நைட்டு முழுக்கத் தேடிக் கண்டுபிடிச்சுட்டாரு. அந்த அளவுக்கு, தான் என்ன வேலை செஞ்சோம்ங்கிறதுல அவருக்குத் தெளிவு இருந்தது. பிடிக்காததுன்னு கேட்டா, ஒரு விஷயத்துல தனியா முடிவெடுத்துட்டா அதிலுள்ள குறைநிறைகளை யார் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் ஏத்துக்கவே மாட்டார். பிடிவாதமா இருப்பார். மனசுக்கு என்ன தோணுதோ அதைத்தான் எடுப்பார். இது தப்புன்னு சொல்லலை. ஆனா, எனக்கு இது மாதிரி விஷயத்துல  உடன்பாடில்லை என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க