புழுதி பறக்கும் பாரேய்... | Best Bowlers for 2019 World Cup Cricket Teams - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

புழுதி பறக்கும் பாரேய்...

கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் கேம் மட்டுமல்ல; யார்க்கர், பௌன்ஸர், ஸ்விங் எனப் பந்துவீச்சிலும் ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இந்த உலகக்கோப்பைத் தொடரில் நம்மை அப்படி ஈர்க்கக்கூடிய பௌலர்கள் யார் யார்?

இந்தியா - முகமது ஷமி
பு
ம்ரா, குல்தீப், சஹால் போன்றோர் இருக்கும்போது ஷமியா? ஆம், இந்த உலகக்கோப்பையில் ஷமியின் தாக்கம் கண்டிப்பாக எல்லோரும் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே இருக்கும். பேட்டிங்குக்குச் சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் விக்கெட் வீழ்த்துவது ரொம்ப முக்கியம். முதல் பவர்பிளே, மிடில் ஓவர், டெத் என எல்லா இடங்களிலும் பந்து வீசி விக்கெட் வீழ்த்தக்கூடிய திறன்கொண்டவர் ஷமி. இந்த ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். கடந்த உலகக்கோப்பையில்கூட 17 விக்கெட்டுகள் (7 போட்டிகள்) கைப்பற்றியிருந்தார். பந்தை நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய அவரது திறனே இந்தியாவுக்கு மிக முக்கிய ஆயுதமாக விளங்கும்.