சொல்வனம் | solvanam - Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

சொல்வனம்

ஓவியம்: செந்தில்

தொடர்தல்!
ஒவ்வொரு படிக்கட்டாக
இறங்கி வந்த குழந்தை,
கடைசிப் படிக்கட்டுக்கு
முந்தைய படிக்கட்டிலிருந்து
சட்டெனக் குதித்துவிட,
திடுக்கிட்டு பின், தொடர்கிறது
பின்தொடர்ந்து வந்த காலம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க