முள்ளிவாய்க்கால் பாடல் - கவிதை | Poetry - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

முள்ளிவாய்க்கால் பாடல் - கவிதை

தீபச்செல்வன், ஓவியம்: செந்தில்

ண்ணை அகழ்ந்தெடுத்த
நிறமிழந்த ஆடைகளை அணிந்து
உக்கிக் கரையா எலும்புக்கூடுகளுடன்
பேசுமொரு தாயின்
உடைந்த விரல்களிற் பட்டன
தடித்துறைந்த இறுதிச் சொற்கள்

சொற்களை அடுக்கினாள் மலைபோல

கையசைத்து விடைபெற்று களம் புகு நாளில்
வெகுதூரம் சென்றுவிட்ட பிறகும்
படலையிற் கிடந்து பார்த்திருந்தது போல்
பறவைகளின் சிறகுகள்
அஞ்சலி மலர்போல் சிதறிய மணல்வெளியிற்தான்
இன்னமும் புரண்டு கிடக்கிறாள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க