இறையுதிர் காடு - 24 | Iraiyuthir kaadu: Indra Soundarrajan series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

இறையுதிர் காடு - 24

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

அன்று   கரடி தன் போக்கில் போகவும், அஞ்சுகனும் புலிப்பாணியும் புதிய ஒரு தெம்பு உடம்பில் ஊற்றெடுப்பதுபோல் உணர்ந்தனர். அப்படியே அந்த வேர்ப்பலாவில் வெடித்த பலா ஒன்றின் மதர்த்த சுளைகள் சிலவற்றை எடுத்துச் சாப்பிட விழைந்தனர். சற்றுத் தள்ளி ஒரு வேங்கைமரம் பூரிப்போடு வளர்ந்திருக்க, அதன் ஒரு கிளை பாகத்தில் அரைவட்டக் கோள அளவில் தேன்கூடு ஒன்றும் கண்ணில்பட்டது. இருவரும் அதையும் கண்டனர். ஒருபுறம் பலாச்சுளை - மறுபுறம் தேன்கூடு... பக்குவமாய் எடுக்கத் தெரிந்தாலோ, அற்புதமான காலை உணவு அது.