பரிந்துரை: இந்த வாரம்... ஆண் குழந்தை வளர்ப்பு | Dr. Shalini Recommend about parenting a male child - Ananda Vikatan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2019)

பரிந்துரை: இந்த வாரம்... ஆண் குழந்தை வளர்ப்பு

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் மனநல மருத்துவர் ஷாலினி.

ண் குழந்தைகள்தான் சிறப்பானவர்கள் என்ற கருத்தாக்கம் எப்படி வந்தது? ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் சொத்துரிமை இருந்தது.  பெற்றோர்கள் தங்கள் முதுமைக்கான பாதுகாப்பாக ஆண்  குழந்தையை நினைத்தார்கள். அதனால்  ஆண் குழந்தைகளுக்குப் பல சலுகைகளைக் கொடுத்தனர். தவறு செய்தாலும் கண்டிப்பதில்லை.  ஆண் குழந்தைகள் வளர்ப்பிலும் அதிக கவனம் செலுத்தவில்லை.