அன்பின் உலகில் அழகிய உயிர்கள்! | How to Train Your Dragon: The Hidden World - Hollywood Movie Review - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

அன்பின் உலகில் அழகிய உயிர்கள்!

டிராகன் என்கிற கற்பனையான விலங்கை வைத்து பயமுறுத்திவந்த ஹாலிவுட்டை, அன்பின் பக்கம் திருப்பியது, How to train your dragon படத்தொடர். இதன் மூன்றாவது பாகம்தான், How to Train Your Dragon: The Hidden World .

பெர்க் என்னும் கிராமத்தில் வசிக்கும் வைக்கிங் இனத்தைச் சேர்ந்தவன், ஹிக்கப். அங்கு ஒருமுறை நைட்ஃப்யூரி இனத்தைச் சேர்ந்த டூத்லெஸ் என்னும் டிராகன் வந்துவிடுகிறது. முதலிரண்டு பாகங்களிலும் இருவரின் நட்புதான் பிரதானம்.

மனிதர்களும் டிராகன்களும் எப்படி ஒற்றுமையாக வாழ்வது என்பதுதான் கதை. என்னதான் ஒற்றுமையாக வாழ்ந்தாலும், வில்லன் என்று ஒரு ஜீவன் இருக்கத்தானே செய்யும்? அப்படித்தான் முதலிரண்டு பாகங்களிலும் வில்லனை, வைக்கிங் எப்படி வெல்கிறார்கள், எப்படி டிராகனுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள் என்பதை ஜாலியாகச் சொல்லியிருந்தார்கள்.