சுற்றுச்சூழல் கதை: ஆயிரம் கைகள் ஆயிரம் கால்கள்! | Environment story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

சுற்றுச்சூழல் கதை: ஆயிரம் கைகள் ஆயிரம் கால்கள்!

காயத்ரி வாயாடிப் பெண். எதைப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் கேள்விகளால் துளைத்துவிடுவாள். அவளைக் கண்டாலே கேள்விகளுக்குப் பயந்து ஓடி ஒளிபவர்களும் உண்டு. அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே கடினம்.

‘பத்து வயதேயான இந்தச் சிறுமியின் மூளையில் எப்படித்தான் இத்தனை கேள்விகள் உதிக்கிறதோ?’ என்று ஆசிரியர்கள் வியப்பார்கள். அவள் கேள்விகளுக்கான விடையைத் தேடித் தேடிப் பாடம் எடுப்பார்கள்.

காயத்ரி மனிதர்களிடம் மட்டும் கேள்வி கேட்பதில்லை. பறவைகளிடம், விலங்குகளிடம், அவ்வளவு ஏன்? பூச்சிகளைப் பார்த்தாலும் கேட்பாள்.

அப்படித்தான் அன்றும் நடந்தது. அன்றைய கேள்வி ஓடிக்கொண்டிருந்த ஓடையிடம். அது முண்டந்துறை மலையடிவாரத்தில் வீட்டுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த ஓடை.