கத்தரிக்காய் ஓட்டம்! | Kids story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

கத்தரிக்காய் ஓட்டம்!

வ.ஆரவ்

ந்த ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய காய்கறித் தோட்டம் இருந்துச்சாம். அந்தத் தோட்டத்துல நிறைய்ய்ய்ய்ய்ய காய்கறிகள் இருந்துச்சாம். அதில், பர்பிள் நிற கத்தரிக்காய்களும் முளைச்சிருந்துச்சாம். அதுல மூணு கத்தரிக்காய்கள் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். செடியில், அடுத்தடுத்து இருந்த மூணும் ஊஞ்சல் மாதிரி ஆடி விளையாடுமாம்.

டெய்லியும் காலையில ஷவர்ல குளிக்கிறது, மண்ல இருக்கிற சத்துகளைச் சாப்பிடறது, சூரிய ஒளியில காயுறதுனு ரொம்ப என்ஜாய் பண்ணிட்டிருந்துச்சுங்க.

பக்கத்து ஊர் விவசாயிக்கு பர்பிள் கத்தரிக்காயைத் தன் தோட்டத்துல விளைவிக்க ரொம்ப நாளா ஆசை. அந்தக் கத்தரிக்காய் வெளைஞ்ச ஊரைத் தேடி வந்தாராம். இதைத் தெரிஞ்சுகிட்ட மூணு பர்பிள் கத்தரிக்காயும் பயந்துபோச்சாம்.