மியூசியத்தில் ஒரு கொள்ளை! | Detective Story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

மியூசியத்தில் ஒரு கொள்ளை!

நுங்கம்பேட்டை எக்ஸ் 2 போலீஸ் ஸ்டேஷன். அந்த நாளின் பரபரப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. எட்டரை மணிக்கு காவலர்கள் வந்த பிறகுதான் சத்தம் அதிகரிக்கத் தொடங்கும். ஹெட் கான்ஸ்டபிளின் மேசை மீதிருந்த லேண்ட்லைன் போன் ஒலித்தது. அந்த மேசை, இன்ஸ்பெக்டர் ஜனகராஜ் அறைக்கு வெளியே இருந்தது. எழுந்துபோய் போனை எடுத்து காதில் வைத்த இன்ஸ்பெக்டர் ஜனகராஜ் அதிர்ந்தார். நுங்கம்பேட்டையில் அமையவிருந்த தனியார் அருங்காட்சியகத்தில் திருட்டு நடந்துவிட்டது.

திருட்டைப் பற்றி, போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார் வருவதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது?

இருக்கிறது... இன்னும் ஒரு வாரத்தில் அந்த அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட இருக்கிறது. திறந்துவைக்க வருபவர் மாநிலத்தின் முதலமைச்சர்.

சம்பவ ஸ்தலத்துக்கு விரைந்தார்ஜனகராஜ். அருங்காட்சியகத்தின் கியூரேட்டர் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார். கையை வேறு பிசைந்துகொண்டிருந்தார். பதற்றம் வந்தால் கையைப் பிசைவது எல்லோரையும் போலவே அவருக்கும் வழக்கமாக இருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க