பூமராங் - சினிமா விமர்சனம் | Boomerang Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

பூமராங் - சினிமா விமர்சனம்

‘நீ எதை வெச்சுத் தாக்குறியோ, அதுவே  உன்னைத் திரும்பி வந்து தாக்கும்...’ - ‘பூமராங்’ சொல்லும் தத்துவம் இதுதான். 

சுமார் மூஞ்சியிலிருந்து, சூப்பர் மூஞ்சியாக மாறுகிறது, அதர்வாவின் கதாபாத்திரம். பிறகு அவருக்கு வரும் பிரச்னைகள், அதற்குப் பின்னணியிலிருக்கும் கார்ப்பரேட் நிறுவனம், இடையிடையே விவசாயம் அழிவதற்குப் பின்னாலிருக்கும் அரசியல், நதிநீர் இணைப்பு, தண்ணீர்ப் பிரச்னை, காதல் என எல்லாம் கலந்துகட்டிக் கொடுத்திருக்கிறார் ஆர்.கண்ணன்.