சத்ரு - சினிமா விமர்சனம் | Sathru Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/03/2019)

சத்ரு - சினிமா விமர்சனம்

டமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்க, கயவர்களை வேட்டையாடி விளையாடும் காவல்துறை அதிகாரியின் அதே பழைய காலத்துக் கதை!

மீசை, புல்லட், கூலிங் க்ளாஸ் என  நேர்மையான அதிகாரிக்கான பத்துப் பொருத்தங்களும் கொண்டவர் எஸ்.ஐ கதிரேசன். ஒரு வழக்கில் குழந்தைக் கடத்தல் கும்பலுக்கும் அவருக்கும் பகை உண்டாகிறது. அந்தக் கும்பல், கதிரின் குடும்பத்துக்குக் குறி வைக்கிறது. அதிலிருந்து கதிர் தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா, இல்லையா என்பதே சத்ருவின் கதை.