மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

மிஸ்டர் மியாவ்

ந்த வாரம் மிஸ்டர் மியாவ் கூறும் சுவாரஸ்யம், காஜல் அகர்வால் பற்றியது. தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களைக் கடந்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் பற்றிய ‘வாவ்’ தகவல்கள் இதோ! 

காஜல் அகர்வால் நடித்துக்கொண்டிருக்கும் ‘பாரிஸ் பாரிஸ்’ திரைப்படம், பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடித்து வெளியான ‘குயின்’ படத்தின் ரீமேக். ‘குயின்’ படத்தில் கங்கனாவின் சம்பளம் ரூ.11 கோடி. ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் காஜலின் சம்பளம் ரூ.2 கோடி மட்டும்தானாம்! 

அஜய் தேவ்கன் நடித்த ‘சிங்கம்’தான் காஜலின் முதல் பாலிவுட் படம் என்று பலரும் நினைத்துக்கொண்டிருப்பர். ஆனால் இதற்கு முன்பு, ‘க்யூன், ஹோ கயா நா’ என்ற படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ஒரு பாடலுக்கு காஜல் நடனமாடியிருக்கிறார்.