கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்! | Vijay's political game - Vijay-Atlee movie updates - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்!

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லி காம்பினேஷனில் ஹாட்ரிக்காக அடுத்த படம் தயாராகிவருகிறது. நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, யோகிபாபு, ஆனந்தராஜ் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.

* படத்தின் களம், கால்பந்து விளையாட்டு. பொதுவாகவே சமீபத்திய விஜய் படங்கள் அரசியல் பேசுவதைப்போலவே, இந்தப் படமும் விளையாட்டுத்துறைக்குள் உள்ள அரசியலைப் பேசும் என்கிறார்கள்.

ஏற்கெனவே வந்த விஜய்-அட்லி படங்களைப்போல் பழிவாங்கல் கதைதான். தன் நண்பனின் இழப்புக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவதும் நண்பனின் கனவை நிறைவேற்றுவதும்தான் கதை.

விஜய், கதிர் இருவரும் கல்லூரி நண்பர்கள். கால்பந்து விளையாட்டு வீரர்கள். கால்பந்தில் உலக அளவில் புகழ்பெற்ற வீரராக வருவதே இருவரின் லட்சியம். பிறகு, இருவரும் கால்பந்துப் பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். இரு அணிகளுக்கிடையேயான போட்டியில் ஏற்பட்ட மோதலில் கதிர் கூலிப்படையால் கொல்லப்படுகிறார். அது சாதாரணக் கொலை எனப் பலரும் நினைத்திருக்க, அதன் பின்னால் மாபெரும் சதி இருக்கிறது என விஜய்க்குத் தெரியவருகிறது. நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க வேண்டும், கதிர் பயிற்றுவித்த அணியை வெற்றிபெறவைக்க வேண்டும் என்ற இரண்டு சவால்கள் விஜய் முன் நிற்கின்றன. அதை விஜய் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.