நெடுநல்வாடை - சினிமா விமர்சனம் | Nedunalvaadai - Movie review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

நெடுநல்வாடை - சினிமா விமர்சனம்

லைவனைப் பிரிந்து வாடைக்காலத்தில் வாடும் தலைவியின் துயரே ‘நெடுநல்வாடை.’

உறவுகளுக்கு இடையிலான உணர்வுப் போராட்டமும், கனவு களுடனான உழைப்பின் போராட்டமுமே படத்தின் மையக்கரு. ஒவ்வொரு பிரிவுக்கும் தோல்விக்கும் காத்திருப்புக்கும் பின்னே ஒரு நேர்மையான காரணம் உண்டு என்பதை அழகியலோடு பதிவுசெய்திருக்கிறது நெடுநல்வாடை.
 
தந்தையின் ஊதாரித்தனத்தால் தன் தாய், தங்கையுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் இளங்கோ, தாத்தா கருவாத்தேவரின் கட்டுப்பாட்டில் வளர்கிறான். அவன் வாழ்வில் நேரும் காதல், தியாகம், பிரிவு, போராட்டம், ஏக்கம் என விரிகிறது படம். தாத்தா - பேரன் உறவு மிக அசலாகப் பதிவாகியிருக்கிறது. ஒரே சாதிக்குள்ளும்கூட காதலுக்கான தடையாய்ப் பொருளாதாரம் ஒரு முக்கிய காரணியாய் இருப்பதைப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர்.  கரும்பு விவசாயத்தை வாழ்வாதார மாகக்கொண்ட கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிது. ஒரு புதிய களத்தையும் மக்களையும் அறிமுகப்படுத்தியதற்காக இயக்குநர் செல்வக்கண்ணனைப் பாராட்டலாம்.