இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம் | Ispade Rajavum Idhaya Raniyum - movie review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்

காதலில் அன்பும் ஈகோவும் ஆடும் `உள்ளே வெளியே’ ஆட்டமே, இஸ்பேட் ராஜாவும்  இதய ராணியும்!

`ராஜா’ கௌதமாக ஹரீஷ் கல்யாண். எதிலும் அவசரம் காட்டும் அடாவடிக் காதலன். தேன்மிட்டாய் பாட்டிலைத் தூக்கி அடியாளின் தலையில் எல்லாம் உடைத்து மாஸ் காட்ட முயன்றிருக்கிறார்.

`ராணி’ தாராவாக, ஷில்பா மஞ்சுநாத். எதிலும் பொறுமை காட்டும் பொறுப்பான காதலி. காதலன், காதலிக்கு இடையேயான கெமிக்கல் ரியாக்‌ஷனில் ஷில்பாவின் கண்கள், கேட்டலிஸ்ட். குரல், ஆன்டி கேட்டலிஸ்ட்!  இரண்டு ஜோக்கர்களாக, மாகாபா ஆனந்த் மற்றும் பாலசரவணன். பல இடங்களில் சிரிக்கவைக்கிறார்கள். மாகாபா குமாரு, சூப்பர் குமாரு! செட்டின் மற்ற கார்டுகளாக, பொன்வண்ணன், சுரேஷ் மற்றும் லிஸி ஆண்டனி!