ரெண்டு புரத்திலும் சண்டை! | Interview with debut director M.S. Arjun - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

ரெண்டு புரத்திலும் சண்டை!

“பிரபுதேவாவின் கேரக்டர் பெயர் ‘எங்க நாராயணன்’, இதேபோல் ஆர்.ஜே.பாலாஜியின் பெயர் மங்களம், ‘கும்கி’ அஸ்வினின் பெயர் சங்கர். இந்த மூன்று கதாபாத்திரங்களின் முதல் இரண்டெழுத்துகளையே படத் தலைப்பாக்கியுள்ளோம்.” - ‘எங் மங் சங்’ படத்துக்கான பெயர்க்காரணத்தை, படம் வரைந்து பாகம் குறிப்பதுபோல் விளக்குகிறார் அறிமுக இயக்குநர் அர்ஜுன். ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ படங்களில் இணை இயக்குநர். ‘ராட்சசன்’ படத்தின் இணை திரைக்கதை ஆசிரியர்.

“ஒரு பீரியட் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே என் கனவு. ‘எங் மங் சங்’  1980-களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம். பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி, அஸ்வின் மூவரும் சீனா சென்று தற்காப்புக் கலையான குங்பூ கற்கிறார்கள். அந்தக் காட்சிகள் படத்தில்  20 நிமிடங்கள்  இடம்பெறுகின்றன.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க