“அதுவரை சினிமாவில் இருக்கணும்!” | Interview with kollywood director AL Vijay - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

“அதுவரை சினிமாவில் இருக்கணும்!”

“ ‘தெய்வத் திருமகள்’ சாரா , ‘கரு’ வெரோனிகா, ‘லட்சுமி’ தித்யா பாண்டே... இவங்கள்லாம் என் குழந்தைகளாவே ஆகிட்டாங்க. ‘வனமகன்’ சாயிஷா தங்கையாகிட்டா. இதேபோல்தான் சாய்பல்லவியும் அவங்க தங்கை பூஜாவும்.  சரண்யா பொன்வண்ணன் மேடம் எனக்கு அக்கா. அவங்க நம்பரை ‘அக்கா’ன்னுதான் சேவ் பண்ணி வெச்சிருக்கேன். பிரபுதேவா சார், நீரவ் ஷா, ஜெயம் ரவி, ஆர்யா எல்லாம் பிரதர்ஸ். ஜி.வி. என் நெருங்கிய நண்பன். பிரியதர்ஷன் சார், ஐசரி கணேஷ் அங்கிள் இருவரும் என் வழிகாட்டிகள். இப்படி சினிமா மூலம் கிடைச்ச அழகான உறவுகளை பொக்கிஷமா நினைக்கிறேன்.” - உறவும் உணர்வும் கலந்த கலவையாய் இருப்பதுதான் இயக்குநர் விஜய்யின் சிறப்பு. ஒருபுறம் தங்கை சாயிஷா-ஆர்யா திருமண வேலைகள், மறுபுறம் நண்பன் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடு என்று நட்பும் உறவும் கலந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். இந்தப் பரபரப்பு அடங்கிய நள்ளிரவு வேளையில் விஜய்யை அவரின் அலுவலகத்தில் சந்தித்தேன். அந்தச் சந்திப்பிலிருந்து...

“நல்லா நினைவிருக்கு... பிரபுதேவா சாரும் ஐசரி கணேஷ் அங்கிளும் சேர்ந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினாங்க. அந்த நிகழ்ச்சி பிரபு சார் வீட்ல நடக்குது.  ‘இதன் முதல் படத்தை நீங்க டைரக்ட் பண்ணணும், நீங்க ஹீரோவா நடிக்கணும்’னு என்னையும் ஜெயம் ரவி சாரையும் சேர்த்தாங்க. ‘இது ஹீரோயினை மையப்படுத்தின கதை. இதில் எனக்கு நடிக்க ஸ்கோப் இருக்குமா’ன்னு ரவி சாருக்கு ‘தேவி’ கதையில் டவுட். பிறகு ‘தேவி’ கதையைக் கேட்ட பிரபுதேவா சார், ‘நல்லா இருக்கு. பேய் என்பது யுனிவர்சல் கான்செப்ட். ஒர்க்கவுட் ஆகும். இந்தி, தமிழ், தெலுங்குன்னு மூணு மொழிகள்ல பெருசா பண்ணலாம். பிரபுதேவா ஸ்டுடியோஸ்லயே பண்ணுவோம்’னார். ‘அப்படின்னா இந்தியா அறிந்த நடிகர் ஒருத்தர் வேணும். பிரபு சாரே ஏன் பண்ணக்கூடாது’ன்னு கணேஷ் அங்கிள்ட்ட சொன்னேன். ‘என்னது நானா, தமிழ்ல நடிச்சு 12 வருஷம் ஆச்சே?’ன்னு பிரபுதேவா சார் யோசிச்சார். ஆனா அதுக்கப்புறம் சின்சியரா நடிச்சுக்கொடுத்தார். படம் ஹிட். இப்ப ‘சார்லி சாப்ளின்-2’, ‘மெர்க்குரி’, ‘பொன்மாணிக்கவேல்’, ‘எங்மங்சங்’, ‘தேள்’, ‘ஊமை விழிகள்’னு அஞ்சாறு படங்கள் முடிச்சு வெச்சிருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க