மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

மிஸ்டர் மியாவ்

படம்: கிரண் ஷா

இந்த முறை மிஸ்டர் மியாவ் வலம் வந்தது அக்கட பூமியான ஹைதராபாத். அங்கிருந்து நடிகை சாயிஷா பற்றி மியாவ் அள்ளிவந்த தகவல்கள் இதோ... 

சாயீஷா அறிமுகமானது, ‘அகில்’ என்ற தெலுங்குப் படத்தில். நாகார்ஜூனாவின் மகன் அகிலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த சாயீஷா, படத்தின் டப்பிங் முடிந்த நிலையில், புகைப்பட ஆல்பத்தை வெளியிட்டார். இயக்குநர் விஜய் அவரது ஆல்பத்தைப் பார்த்து ‘டிக்’ அடிக்கவே, ‘வனமகன்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

சாயீஷாவின் தாத்தா திலீப்குமாரும், பாட்டி சயீரா பானுவும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள்.  பாட்டி சயீரா பானு, சாயீஷாவின் திருமணக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தியுள்ளார்.

சிறு வயதிலிருந்தே படிப்பில் கில்லாடியான சாயீஷா, பள்ளிப் படிப்பில், 90 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.