அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்! | Director Vetrimaaran interview about Asuran movie - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)

அப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்!

`லாக்கப்’ நாவல்  `விசாரணை’ படமாக உருவாச்சு. ‘நல்ல படம்’னு நாலா பக்கங்கள்ல இருந்தும் பாராட்டுகள். அப்ப ஓர் அலைபேசி அழைப்பு. ‘நான் பூமணி பேசுறேன். என்னைத் தெரியுமா உங்களுக்கு?’ன்னு எதிர்முனையில் ஒரு மெல்லிய குரல். ‘தெரியும் சார் சொல்லுங்க’னேன். ‘உங்களைச் சந்திக்கணும்’னார்.  நேரில் சந்திச்சேன். ‘நாவல்களைப் படமாக்குறதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?’ன்னு கேட்டார்.  ‘எனக்கு அதில் ஆர்வம் இருக்கு சார்’னு சொன்னேன். உடனே, ‘இது உங்களுக்குப் பொருத்தமான நாவலா இருக்கும். படிங்க’ன்னு சொல்லி, தன் ‘வெக்கை’ நாவலைக் கொடுத்தார். படிக்க ஆரம்பிச்சேன். ‘அப்பா, அம்மா, மகன்னு இருக்கிற ஒரு பேமிலி டிராமா படம் இதுவரை  நான் பண்ணியதில்லை. இது அப்படியான ஒரு படமாகவும் இருக்கும். தவிர, சாதிய அமைப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, தண்டனை  முறைகளின் நியாயமற்ற தன்மைகளைப் பேசும் படமாகவும் இருக்கும். நிச்சயம் இதைப் படமா பண்ணணும்’னு தோணுச்சு. ‘வெக்கை’ நாவல், ‘அசுரன்’ ஆன கதை இதுதான்” வெற்றிமாறன் சொல்லச் சொல்ல அதுவே ஒரு படமாக நமக்குள் ஓடத்தொடங்குகிறது. தன் உத்திரமேரூர்த் தோட்டத்தில் தர்ப்பூசணிப் பழங்களைப் பறித்தபடியே பேசத்தொடங்குகிறார் வெற்றிமாறன்.

“ ‘வெக்கை’ நாவல், 25 மணிநேரப் படமா எடுக்கிற அளவுக்கான பதிவு. அதில் சினிமாவுக்குத் தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு கதையா பண்ணியிருக்கோம். இது 60-களின் தொடக்கம், 80-களின் நடுவில்னு இரண்டு காலகட்டங்கள்ல நகரும் கதை.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க