“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!” | Director Suseenthiran interview about Kennedy Club movie - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)

“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்!”

“எங்க ஊர்ல பெண்கள் கபடி ரொம்பவே பாப்புலர். அந்த டீமுக்கு என் அப்பாதான் ஆலோசகர். விவசாயம் பார்க்கிறதைவிட, கபடி டீம்கூட இருக்கிறதைத்தான் அவர் விரும்புவார். பெண்கள் கபடி விளையாடுறது, அவங்களுக்கான போராட்டம், அதில் நடக்கும் அரசியல் இதையெல்லாம் பதிவு பண்ணணும்ங்கிற அவருடைய எண்ணம்தான், இந்தப் படம் உருவாகக் காரணம்.” - ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் தொடக்கப்புள்ளியை  ஆர்வத்துடன் விவரிக்கிறார், இயக்குநர் சுசீந்திரன்.

“ ‘கென்னடி கிளப்’ பெயர்க் காரணம்?”

“50 வருடம் பழைமையான கபடி டீம் கதைக்குத் தேவைப்பட்டது. அப்படித் தமிழ்நாட்டுல இருக்கிறது, மூணே டீம்தான். வெண்ணிலா கபடிக்குழு, கென்னடி கிளப், லட்சுமி மில்ஸ் டீம். அதுல, ‘வெண்ணிலா கபடிக்குழு’வைப் படமா எடுத்துட்டேன். லட்சுமி மில்ஸ் டீம் தனியார் கம்பெனியுடையது. அதனால, ‘கென்னடி கிளப்’பைக் கதைக்கு எடுத்துக்கிட்டேன்”

நீங்க எப்படி பீல் பண்றீங்க