“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!” | Gautham Karthik interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)

“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை!”

‘கடல்’ படத்துல நடிக்கிறப்போ, மணிரத்னம் சார் ‘அப்பா பாடி லாங்குவேஜ் வருது பார்... மாத்திக்கோ!’ன்னு சொல்வார். நான் அவரோட பையன். அவருடைய உடல்மொழி எனக்கும் இருக்கத்தான் செய்யும். எனக்கு என்ன ஆச்சர்யம்னா, நான் ஊட்டியில படிச்சு வளர்ந்தேன், அவர் சென்னையில்தான் இருந்தார். அவர்கூட அதிகமா பழகினதும் இல்லை. அப்படி இருந்தும், அப்பாவோட தாக்கம் நடிப்புல எப்படி வந்துச்சுன்னு தெரியலை”  ஒரு புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் கெளதம் கார்த்திக்.

“எனக்கு மியூசிக், மார்க்கெட்டிங்லதான் ஆர்வம் அதிகமா இருந்தது. பெங்களூருல சைக்காலஜி, மீடியா, இங்கிலீஷ் மூணுக்கும் சேர்த்து ஒரு ‘ட்ரிபிள் டிகிரி கோர்ஸ்’ படிச்சுக்கிட்டிருந்தேன். ஸ்கூல் படிக்கும்போது, ‘நீயும் அப்பா மாதிரி சினிமா வுல நடிக்கலாமே’ன்னு சிலர் சொல்வாங்க. அந்த வயசுல ஒரு திமிர் இருக்கும்ல... ‘நான் ஏன் அப்பா மாதிரி சினிமாவுல நடிக்கணும்’னு நகர்ந்திடுவேன். காலேஜ் படிக்கும்போது ஒருநாள் அப்பா போன் பண்ணினார். ‘மணி சார் கூப்பிடுறார், போய்ப் பாரு’ன்னு சொன்னார். ‘சினிமா நம்மளை இழுக்குதே’ன்னு யோசிச்சேன். பொதுவா, அப்பா எதையும் என்கிட்ட கேட்கமாட்டார். இந்த விஷயத்தைச் சொன்னதும், மணி சாரைப் பார்த்தேன். ‘தமிழ் பேசுவியா’ன்னு கேட்டார், அரைகுறைத் தமிழ்ல பேசிக் காட்டினேன். ரெண்டு வாரம் கழிச்சு, ஒரு கதையைச் சொன்னார். அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்த்துக்கப் போறாரோன்னு நினைச்சேன். ஏன்னா, ‘நடிக்கணும்னா, உதவி இயக்குநரா இருந்து நடிப்பைப் பார்த்துக் கத்துக்கணும்’னு அம்மா சொன்னது, மைண்டுல ஓடிக்கிட்டே இருந்துச்சு. வாரம் ஒருமுறை கூப்பிடுவார், அனுப்பிவிடுவார். ஒருநாள், ஒரு காட்சியைச் சொல்லி, ‘நடிச்சுக் காட்டு’ன்னு சொன்னார், நடிச்சேன். அப்படியே படத்துல நடிக்க வெச்சுட்டார்.”