சூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம் | Super Deluxe Tamil Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

சூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம்

நான்கு கதைகள், நான்கு களங்கள், பல வித்தியாசங்கள் இருந்தாலும் எல்லாவற்றினூடாகப் பாலியல் சிக்கல் ஒரு மையச்சரடு. சுருக்கமாக ‘சூப்பர் டீலக்ஸ்’ பற்றி இப்படிச்  சொல்லலாம்.

வீட்டில் சொன்னபடி திருமணம் செய்துகொண்ட முகில் - வேம்பு வாழ்க்கையில் ஒரு வித்தியாச விருந்தாளியின் வருகை நிகழ்கிறது. இன்னொருபக்கம், பல ஆண்டுகளுக்கு முன் ஓடிப்போன கணவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜோதியும் மகன் ராசுக்குட்டியும்! பதின்பருவத்தை நெருங்கும் ஐந்து விடலைகள் தங்கள் வயதிற்கே உரிய சேட்டை ஒன்றை செய்யத் துணிகிறார்கள். தனக்கென ஒரு மதம், அதற்கென சில வழிமுறைகள் என பிரசாரமும் பிரார்த்தனையுமாய் அற்புதம் என்ற ‘கடவுளின் குழந்தை’. முதல் பார்வைக்குத் தொடர்புக் கண்ணியே தென்படாத இந்த நான்கு கதைகளையும் திறமையான திரைக்கதையால் கோத்து கடைசியில் ‘ஆஹா’ன்னு சொல்ல வைக்கிறார்கள் தியாகராஜன் குமாரராஜா அண்ட் கோ!