ஐரா - சினிமா விமர்சனம் | Airaa Tamil Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

ஐரா - சினிமா விமர்சனம்

ழக்கமான பேய் மிரட்டல், துரத்தல், வழக்கமான பேய் ஃப்ளாஷ்பேக், வழக்கத்துக்கு மாறான ஒரு கேரக்டரில் நயன்தாரா - ‘ஐரா’.

மீடியாவில் வேலை பார்க்கும் நயன்தாராவுக்குத் திடீரென கல்யாண ஏற்பாடுகள் நடக்க, அதிலிருந்து விடுபட தன் பாட்டி வீட்டிற்குச் செல்கிறார். அங்கே பேய் அனுபவங்கள் பூச்சாண்டி காட்டுகின்றன. மறுபுறம் தொடர்ந்து சில மரணங்கள் நிகழ்கின்றன. இவை இரண்டிற்கும் முடிச்சு போடு மிடத்தில் மற்றொரு நயன்தாராவின் கதை. நாம் சின்னதாக எடுக்கும் ஒரு முடிவு நமக்குத் தெரியாத யாரோ ஒருவரை எவ்வளவு பெரிதாகப் பாதிக்கும் என்ற பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டை அலுக்க சலிக்கச் சொல்கிறது படம்.