வெளிநாட்டு வேள்பாரி! | Game of Thrones TV series Comes to an end - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

வெளிநாட்டு வேள்பாரி!

ரு வழியாக `#ForTheThrone’டா! ஆம், கேம் ஆஃப் த்ரோன்ஸ் முடியப்போகிறது பிரியமானவர்களே... `அப்படீனா என்னங்கய்யா...’ என்று கேட்பவரா நீங்கள். எட்டு ஆண்டுகள்... ஒரு தொடர்... ஒரு பேர் என்கிற அவார்டு கேட்டகரி பில்டப்புக்கு ஏற்ற அயல்நாட்டு வேள்பாரி இந்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைக்காட்சித் தொடர்.

ஐஎம்டிபி  தளத்தில் 14 லட்சம் பேர் கேம் ஆஃப் த்ரோன்ஸைச் சிறந்த தொடராகத் தேர்வு செய்திருக்கிறார்கள். எட்டு ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பித்துப்பிடித்து அலையவைத்த தொடர். ஏழு சீஸன்களுக்குப் பிறகு இந்த ஆண்டோடு முடிவுக்கு வரவிருக்கிறது.  அதுகுறித்த இந்த ‘சின்னத்திரை பாகுபலி’ பற்றிய சுவாரஸ்ய அப்டேட்டுகள் இங்கே.