இறுதி யுத்தம் - அவெஞ்சர்ஸ் | Avengers: Endgame - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

இறுதி யுத்தம் - அவெஞ்சர்ஸ்

ருவழியா தேனோஸுக்கான முடிவு நெருங்கிவிட்டது.

கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படத்தில் தேனோஸின் மாயக்கற்களால் பல சூப்பர் ஹீரோக்கள் மாயமாகிவிட்டார்கள். அதிலும், ஸ்பைடர்மேன் மறையும்போது கண் கலங்காத சுட்டிகளே இல்லை. கிட்டத்தட்ட ‘தி அவெஞ்சர்ஸ்’ (2012) படத்தில் வந்த சூப்பர் ஹீரோக்கள் மட்டுமே தற்போது இருக்கிறார்கள்.  ஓராண்டு காலமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு 3 மணி நேரத்துக்கு விருந்து படைக்கப்போகிறது எண்டு கேம். படத்தின் இறுதிக்காட்சியை உங்களால் யூகிக்கவே முடியாது. ஆனால், அதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள் என ட்விஸ்ட் கொடுக்கிறார் இயக்குநர் ஜோ ருஸ்ஸோ.