“இது காட்டுக் கச்சேரி!” | Director Harish Ram interview about Thumbaa movie - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

“இது காட்டுக் கச்சேரி!”

“நம்ம ஊர்ல குழந்தைங்க ரசிக்கிற படங்கள் உண்மையிலேயே குழந்தைகளுக்கான படமான்னு யோசிச்சுப் பாருங்க. எல்லாப் படமும் பெரியவர்களுக்கான படங்களா தான் இருக்கு. குழந்தைகளுக்கான எக்ஸ்க்ளூசிவ் படம் ஒண்ணு எடுக்கலாம்னு நினைச்சு ஆரம்பிச்சதுதான், ‘தும்பா.’ ” விலங்குகளை மையப்படுத்தி, தான் இயக்கும் கிராஃபிக்ஸ் படம் குறித்துப் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் ஹரிஷ் ராம்.

“ ‘எதிர்நீச்சல்’ படத்துல துரை. செந்தில்குமார் சார் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். அப்படியே அனிருத்கிட்ட பின்னணி இசைக்கான வேலைகளையும் பார்த்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு அனிருத் டீம்ல மியூசிக் சூப்பர்வைசரா சேர்ந்துட்டேன். அப்போ ஆரம்பிச்சு ‘பேட்ட’ வரைக்கும் அவர்கூட வொர்க் பண்ணியிருக்கேன். நானும் அனிருத்தும் ஸ்கூல்மேட்ஸ்.”