சிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை! | Director Samy interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

சிந்து சமவெளி மட்டுமே என் அடையாளமில்லை!

``எனக்கான அடையாளம் ‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற படங்கள் இல்லை. அப்படிப்பட்ட படங்களை எடுக்கவேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன். இனி, நான் எடுக்க நினைக்கும் சினிமாவைத்தான் திரையில் காட்டப்போகிறேன்.” - சர்ச்சையான கதைகளையே படமாக்கிக்கொண்டிருந்த இயக்குநர் சாமியின் வார்த்தைகள் இவை.

1997-ஆம் ஆண்டு மஜித் மஜீதி இயக்கத்தில் இரானிய மொழியில் உருவான க்ளாசிக் படம், ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven).  பலரையும் உலக சினிமாப் பக்கம் இழுத்து வந்த படம். இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள்  ஆனநிலையில் தமிழில் ‘அக்கா குருவி’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார், சாமி.