வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம் | Vellai Pookal - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

வெள்ளைப்பூக்கள் - சினிமா விமர்சனம்

வேலைக்கு ஓய்வு கொடுத்தாலும், மூளைக்கு ஓய்வு கொடுக்காத இந்தியக் காவல்துறை அதிகாரி ருத்ரனின் அமெரிக்க ஆட்டமே ‘வெள்ளைப்பூக்கள்.’

அமெரிக்க மண்ணில் அடுத்தடுத்து நடக்கும் ஆட்கடத்தல்களைத் துப்பறிய முயல்கிறார் ருத்ரன். ஒரு கட்டத்தில் அவர் குடும்பத்திலேயே ஒருவர் கடத்தப்பட, எல்லாக் கடத்தல்களுக்கும் உள்ள தொடர்புப்புள்ளிகளை இணைத்துக் குற்றவாளியை நெருங்கும்போது, ருத்ரனோடு நம்மையும் படபடக்க வைத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்  விவேக் இளங்கோவன்.