மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ் இந்த வாரம் பெங்களூரை வலம் வந்தார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா பற்றிய வாவ் தகவல்கள் இதோ!

 தெலுங்கு, கன்னட சினிமாவில் கலக்கிக்கொண்டிருப்பவர், ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவில் பிறந்த இவர், மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தார். முதல் படமான ‘கிரிக் பார்ட்டி’ கன்னடப் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ‘சைமா’ விருதுபெற்று, திரையுலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார்.