இது அவெஞ்சர்ஸ் ஆட்டம்! | Avengers: Endgame Movie review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/05/2019)

இது அவெஞ்சர்ஸ் ஆட்டம்!

த்தாண்டுகளாக ஒரு படத்தின் இறுதி முடிவுக்காக எதிர்பார்ப்பை எகிறவைத்து, இப்போது வசூலில் கெத்து காட்டியிருக்கிறது மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்.

 ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ தானோஸுக்கு, இந்த ‘எண்டு கேம்’ அயர்ன் மேனுக்கு’ - இதுதான் இந்த எண்டு கேம் படத்துக்கான ஒன்லைன்.

‘இன்ஃபினிட்டி வார்’ திரைப்படத்தின் இறுதியில் தானோஸின் ஒரு சொடுக்கில், பாதி உலகம் மறைந்துபோகிறது. பிளாக் பேந்தர், ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்டிரேஞ்ச், ஸ்கார்லெட் விட்ச் என, பல சூப்பர் ஹீரோக்களும் மறைந்து போகிறார்கள். அவெஞ்சர்ஸ் ’மேனேஜரான’ நிக் ஃப்யூரி அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல், கேப்டன் மார்வெலுக்கு சிக்னல் அனுப்பிவிட்டு மறைந்துபோகிறார். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நிலையில் படம் முடிய, “கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன் றார்?” என்னும் கேள்வியைவிட, காணாமற்போன சூப்பர்ஹீரோக்கள் எப்படி மீண்டும் வருவார்கள் என்னும் கேள்விதான் உலகம் முழுவதும் துளைத்தெடுத்தது. இதற்கு நடுவே ப்ரீ லார்சன் நடிப்பில் `கேப்டன் மார்வெல்’ திரைப்படமும் `ஆன்ட் மேன் & தி வாஸ்ப்’ திரைப்படமும்  வெளியாக, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்கள் மார்வெல் மாணவர்கள். ஒருவழியாக இறுதி பாகத்துக்கான விடையை அவிழ்த்திருக்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள்.