மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/05/2019)

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ், இந்த வாரம் நம்ம ‘வணக்கம் சென்னை’யை வலம் வருகிறது. இதோ, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய வாவ் தகவல்கள்!

 ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவரின் தாத்தா அமர்நாத் தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர். ஐஸ்வர்யாவின் அப்பா மற்றும் அத்தையும் தெலுங்கு சினிமாவில் பணியாற்றியவர்கள்தான்.

சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் முன் சன் டிவி-யின் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார் ஐஸ்வர்யா. பிறகு, கலைஞர் டிவி-யின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பெற்றார். சில சீரியல்களிலும் நடித்தார். அப்போது, ஐஸ்வர்யாவின் சம்பளம் நாள் ஒன்றுக்கு 1,500 ரூபாய்.